தமிழ்நாடு

"சதி செய்யப்பட்டு கோகுல்ராஜ் கொல்லப்பட்டார்" - அரசு வழக்கறிஞர் ப.பா.மோகன் பேட்டி

Sinekadhara

சதி செய்யப்பட்டு பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார் என அரசு வழக்கறிஞர் ப.பா.மோகன் கூறியுள்ளார். 

கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளி யுவராஜுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. யுவராஜின் ஓட்டுநர் அருணுக்கும் ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 8 பேருக்கும் ஆயுள் முழுவதும் சிறைதண்டனையும், குற்றவாளிகளான பிரபு, கிரிதர் ஆகிய இருவருக்கும் கூடுதலாக 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்திருக்கிறது.

இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ப.பா.மோகன் கூறுகையில், சதி செய்யப்பட்டு பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். பட்டியல் இன மாணவர் கோகுல்ராஜ் 9 மணி நேரம் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 4 நீதிபதிகளின் விசாரணைக்குப் பிறகு கோகுல்ராஜ் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 10 பேருக்கும் ஆயுள் முழுக்க சிறை குற்றவாளிகள் 10 பேரும் சாகும் வரை சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.