4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை pt web
தமிழ்நாடு

கேப் விடாமல் வெளுத்து வாங்கும் மழை.. சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளையும் பொதுவிடுமுறை!

Angeshwar G

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சென்னையின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீரானது வீடுகளில் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்துடன், இன்று இரவு வரை மழையும், காற்றும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக 4 மாவட்டங்களில் நாளை (05.12.2023) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கனமழையின் தாக்கம் நீடிப்பதால் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பால், குடிநீர், மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும், ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே பணிபுரிய அனுமதிக்கம்படி தனியார் நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.