தமிழ்நாடு

செல்லூர் ராஜூவை முற்றுகையிட்ட மக்கள்: திறப்பு விழாவில் பதட்டம்

செல்லூர் ராஜூவை முற்றுகையிட்ட மக்கள்: திறப்பு விழாவில் பதட்டம்

webteam

ஆம்பூரில் நியாய விலைக்கடையை திறக்க வந்த 2 அமைச்சர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ரெட்டி தோப்பு பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க 30 கோடி நிதி ஒதுக்கி 5 ஆண்டுகள் கடந்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால் மழை காலங்களில் மழைநீர் அதிகளவு தேங்குவதால், மேம்பால பகுதியை கடக்க முடியாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். 

இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர், அந்தப் பகுதியில் நியாயவிலைக் கடை திறந்துவிட்டு திரும்பிய அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் நீலோபர் கபீல் ஆகியோரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை வசதி செய்து தரவும், தண்ணீர் தேங்குவதை தடுக்க, விரைவில் பாலம் அமைக்கவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்தப் போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.