தமிழ்நாடு

லஞ்சம் வாங்கிய பொதுக்கணக்காளர்: கையும் களவுமாக பிடித்த சிபிஐ!

லஞ்சம் வாங்கிய பொதுக்கணக்காளர்: கையும் களவுமாக பிடித்த சிபிஐ!

webteam

ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் பொதுக்கணக்காளர் அருண் கோயலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொதுக் கணக்காளர் அலுவலகத்தில், பொது கணக்காளராக இருந்து வரும் அருண் கோயல், 5
லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது சி.பி.ஐ. அதிகாரிகள் கையும் களவுமாக அவரை பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை
நடத்தப்பட்டு வருகிறது. 

அலுவலகத்தில் இருந்த சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அருண் கோயல் மீது தொடர்ந்து
ஊழல் புகார்கள் வந்ததன் காரணமாக சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் கணக்கு
வழக்குகளை தணிக்கை செய்யும் அதிகாரியாக அருண் கோயல் இருந்து வருகிறார். சிபிஐ சோதனைக்கு ஆதரவாகவும், அருண்
கோயலுக்கு எதிராகவும் ஊழியர்கள் சங்கத்தினர் கணக்காளர் அலுவலகத்தின் வெளியே போராட்டம் நடத்தினர்.