எலான் மஸ்க் முகநூல்
தமிழ்நாடு

எலான் மஸ்க்கிற்கு எதிராக அமெரிக்காவில் வலுக்கும் போராட்டங்கள்!

அமெரிக்காவில் நிர்வாக சீர்திருத்த துறை தலைவர் எலான் மஸ்க்கிற்கு எதிராக போராட்டங்கள் நாளுக்குநாள் வலுத்து வருகின்றன.

PT WEB

அமெரிக்காவில் நிர்வாக சீர்திருத்த துறை தலைவர் எலான் மஸ்க்கிற்கு எதிராக போராட்டங்கள் நாளுக்குநாள் வலுத்து வருகின்றன.

லாஸ் ஏஞ்சலிசில் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமையகத்திற்கு முன் கூடிய மக்கள் போராட்டம் நடத்தினர். மருத்துவத்துறையில் செலவுகளை குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். கார்ப்பரேட் கோடீஸ்வரரான எலான் மஸ்க் அமெரிக்க ஜனநாயகத்தை சீரழிப்பதை தடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.

எலான் மஸ்க் தன் சொத்து மதிப்பை மேலும் அதிகரிக்கவே இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். முன்னதாக மஸ்க்கின் டெஸ்லா கார்களும் எரிக்கப்பட்டன. இவை அனைத்தின் பின்னால் சிலரின் தூண்டுதல் இருப்பதாக மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.