தமிழ்நாடு

பிரதமர் சந்திக்கும் வரை போராட்டம் தொடரும்: அய்யாக்கண்ணு

பிரதமர் சந்திக்கும் வரை போராட்டம் தொடரும்: அய்யாக்கண்ணு

webteam

பிரதமர் மோடி, தங்களை சந்தித்துப் பேசும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு பாதுகாப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாள்தோறும் புதுமையான போராட்ட வடிவத்தை முன்னெடுத்து வரும் தமிழக விவசாயிகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விவசாயிகள் பாதி தலைமுடியை மழித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டம் 21-வது நாளாக இன்றும் தொடர்கிறது. புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு பாதுகாப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு, ‘பிரதமர் மோடி தங்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என்றும் அப்படி சந்திக்கவில்லை என்றால் பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகளைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்’ என்றும் கூறினார்.