புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மீண்டும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அன்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள், இத்திட்டம் ரத்து செய்யப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆட்சியர் உறுதியளித்த பின்னர் போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால், ஒரு ஆண்டை கடந்தும் திட்டத்தை கைவிட மத்திய அரசு உறுதியளிக்கவில்லை என குற்றம்சாட்டி, நெடுவாசல் பேருந்து நிலையம் அருகே பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயம், நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்படும் என தெரிவித்த மக்கள், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக கையக்கப்படுத்தப்பட்ட நிலத்தை திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். திட்டத்தை ரத்து செய்யவில்லையெனில் ஏப்ரல் 12ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.