தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன விழாவில் பக்தர்களை அனுமதிக்கக்கோரி போராட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன விழாவில் பக்தர்களை அனுமதிக்கக்கோரி போராட்டம்

Veeramani

பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன விழாவில் பக்தர்களை அனுமதிக்கக்கோரியும், தேர்த் திருவிழாவை நடத்தக்கோரியும், அதிமுக எம்எல்ஏ தலைமையில் பக்தர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், நோய் பரவலை தடுக்கும் வகையில் வரும் 14 ஆம் தேதி நடைபெறும் தேர்த் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அதற்கு அடுத்த நாளான 15-ஆம் தேதி நடைபெறும் திருமஞ்சன விழாவில் பக்தர்களை அனுமதிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த கோயில் பக்தர்கள், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பாண்டியன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்த நிலையில், அங்கு வந்த காவல்துறையினர் தேர்த் திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, போராட்டத்தை கைவிட வைத்தனர்.