தமிழ்நாடு

மியான்மருடனான உறவைத் துண்டிக்க வலியுறுத்தல்

மியான்மருடனான உறவைத் துண்டிக்க வலியுறுத்தல்

webteam

மியான்மரில் ரோஹிங்யா இன முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மியான்மர் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகே தமுமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மியான்மரில் படுகொலை செய்யப்படும் ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு ஆதரவாக இந்திய அரசு தூதரக உறவை துண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஐ. நா. சபை இவ்விவகாரத்தில் தலையிட வேண்டி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.