தமிழ்நாடு

விபத்துக்களை தடுக்க கோரி சாலை மறியல்

விபத்துக்களை தடுக்க கோரி சாலை மறியல்

webteam

கோவையில் சொகுசு கார் மோதி 6 பேர் உயிரிழந்த இடத்தில், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பொதுமக்கள் அப்பகுதியில் விபத்துகள் நடப்பதை தடுக்க கோரி, திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் அதிவேகமாக வந்த சொகுசு கார் நின்று கொண்டிருந்த ஆட்டோ மற்றும் ஆட்கள் மீது மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஒட்டுநர் ஜெகதீசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உயிரிழந்த சுபாஷினி, நாராயணன், ரங்கதாஸ், அம்சவேணி, குப்பாத்தாள், ருக்குமணி ஆகிய 6 பேருக்கும் விபத்து நிகழ்ந்த இடத்தில் பொதுமக்கள் சார்பில் இன்று அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் உறவினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஆகியோர் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் அப்பகுதியில் சாலை விபத்துகளை தடுக்கவும், வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .