விசிகவினர் எதிர்ப்பு Pt web
தமிழ்நாடு

திருமாவளவன் அவமதிப்பு.? பிரேமலதாவுக்கு எதிராக விசிகவினர் போராட்டம்!

தருமபுரியில் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் அவருக்கு எதிராக பேனர்களை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

PT WEB

தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டாக்டர் வி.இளங்கோவனை ஆதரித்து, தருமபுரி தொலைபேசி அலுவலகம் அருகே, தே.மு. தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா, வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரேமலதா விஜயகாந்த்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டணி கட்சி தலைவர்கள் பெயரை சொல்லும் பொழுது எழுந்து நின்ற, பிரேமலதா விஜயகாந்த், விசிக தலைவர் திருமாவளவன் பெயரை சொல்லும் போது நாற்காலியில் அமர்ந்து இருந்ததால், நேற்று தருமபுரிக்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில், அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது பிரசார வாகனத்தின் முன் நின்றிருந்த, விசிகவினர், திருமாவை அழைக்கும் போது எழுந்து நிற்காமல் இருந்தது ஏன்? ஏன்? என்ற வாசகம் அடங்கிய பதாகையை திடீரென உயர்த்தி பிடித்தனர்.

இதனை சுதாரித்து கொண்ட, வி.சி., தருமபுரி தொகுதி மாவட்ட செயலாளர் பாண்டியன் பேனரை அகற்றினார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு உள்ளது. பிரேமலதா பிரச்சாரக் கூட்டத்தில் கூட்டணி கட்சியான விசிக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது போல பதாகையை உயர்த்திப் பிடித்தது பேசு பொருளாக மாறியுள்ளது.