தமிழ்நாடு

சென்னையில் தமிழிசைக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம்

சென்னையில் தமிழிசைக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம்

webteam

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே முதலில் ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள், தமிழிசையை கண்டித்து அவரது உருவப்பொம்மையை எரித்தனர். இதையடுத்து திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச்சென்றனர். மெர்சல் திரைப்பட விவகாரத்தில் விஜயை வளைத்துப்போட பாரதிய ஜனதா முயற்சிப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டியிருந்தார். இதனை மறுத்துப் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், திருமாவளவன் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக விமர்சித்திருந்தார். இதனால் மெர்சல் யுத்தம், பாஜக - விசிக யுத்தமாக மாறி தொடர் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், ஒரு கருத்துக்கு எதிர் கருத்து கூறியதால், குடும்பத்தினருடன் கூட பேச முடியாத வார்த்தைகளால் தொலைபேசி வழியே தொடர்ந்து திட்டுவதாகவும், தமிழகத்தில் எதிர்கருத்து கூறினால் இதுதான் நிலையா என பாஜக மாநிலத் தலைவர் தமிழி‌சை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.