தமிழ்நாடு

ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலத்தில் 100-வது நாளாக போராட்டம்

webteam

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக அந்த கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் நூறாவது நாளை எட்டியுள்ளது.

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டம் 100-வது நாளை எட்டியுள்ளதைத் தொடர்ந்து, அந்த கிராம அய்யனார் கோயில் திடலில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்முதப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்துக்கள் சங்கு நாதங்கள் முழங்க கடவுளை வேண்டியும், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியும், கிறிஸ்தவர்கள் பைபிள் வாசித்தும் வழிபாடு நடத்தினர்.

போராட்டத்தில் பங்கேற்றுள்ள இளைஞர் ஒருவரின் பெண் குழந்தைக்கு, களத்தில் வைத்து கனல் அரசி எனப் பெயர் சூட்டப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவியர் பங்கேற்ற சிறப்பு நாடகமும் நடைபெற்றது. ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலத்தில் இருந்து வெளியேறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று அந்த கிராம மக்கள் உறுதிபடக் கூறினர்.