தமிழ்நாடு

ஓஎன்ஜிசி-க்கு எதிராக மடிப்பிச்சை எடுக்கும் போராட்டம்

ஓஎன்ஜிசி-க்கு எதிராக மடிப்பிச்சை எடுக்கும் போராட்டம்

Rasus

தஞ்சை ‌மாவட்டம் கதிரா‌‌மங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து மடிப்பிச்சை எடுக்கும் போ‌‌ராட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும். போராட்டத்தின் போது கைதான 10 பேரையும் உடனடியான விடுதலை செய்ய வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஓ.என்.ஜி.சி-யால் மாசுபட்ட குடிநீரை அருந்துவதன் மூலம் ஏற்‌டும்‌ விளைவுகளை நாடகத்தின் மூலமாக விளக்கியும், மடிப்பிச்சை எடுக்கும் போராட்டத்திலும் குழந்தைகள் ஈடுபட்டனர்.