சிவகங்கையில் நடிகை திரிஷாவை கண்டித்து தமிழ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்புக்கு நடிகை திரிஷா ஆதரவு தெரிவித்து வருவதாக கூறி அவர்கள், கண்டன முழக்கமிட்டனர்.
ஆர்யா-திரிஷா நடிக்கும் கர்ஜனை படத்தின் படப்பிடிப்பு நேமத்தம்பட்டியில் நடைபெற்று வருகிறது. இதனையறிந்த பல்வேறு அமைப்பினர் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு வந்து, திரிஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காரைக்குடி காவல்துறையினர் திரைப்படக்குழுவினரிடம் விசாரணை நடத்தினார். அதில், அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியது தெரிய வந்தது. இதனால் படப்பிடிப்பு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ் அமைப்பினர் போராட்டம் நடத்தியபோது நடிகை திரிஷா சம்பவ இடத்தில் இல்லை.