தமிழ்நாடு

போராட்டம் எதிரொலி - ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி 144 தடை உத்தரவு

rajakannan

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், தூத்துக்குடியின் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும், ஆலையின் விரிவாக்கத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் ஆலையைச் சுற்றி உள்ள 21 கிராம மக்கள் கடந்த 3 மாதமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர், அரசியல் கட்சிகள், வணிகர்கள், மீனவர்கள் நாளை முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டங்கள் எதிரொலியாக தூத்துக்குடி தெற்கு மற்றும் சிப்காட் காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் இந்த தடை உத்தரவை அறிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.