தமிழ்நாடு

வாடகைக் குடியிருப்புக்கான சொத்து வரி குறைப்பு

வாடகைக் குடியிருப்புக்கான சொத்து வரி குறைப்பு

Rasus

வாடகைக் குடியிருப்புகளுக்கான சொத்துவரி நூறு சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைத்து திருத்தப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப சொத்து வரி, குடிநீர் வரி, கழிவுநீர் வரி ஆகியவை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குடியிருப்புகள், வாடகை குடியிருப்பு கட்டடங்கள், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கான சொத்துவரி 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு அக்டோபர் முதல் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.

நூறு சதவீதம் அளவுக்கான வரி உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் உயர்த்தப்பட்ட வாடகைக் குடியிருப்புக்கான சொத்துவரியை 50 சதவீதம் அளவுக்கு தமிழக அரசு குறைத்துள்ளது. புதிய அரசாணைப்படி வாடகை குடியிருப்புகளுக்கான சொத்துவரி உயர்வு நூறு சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

உரிமையாளர் குடியிருப்பு மற்றும் வாடகைதாரர் குடியிருப்பு ஆகிய இரண்டுக்கும் ஒரே விகிதத்தில் அதாவது 50 சதவீதத்துக்கு மிகாமல் வரி இருக்கும். குடியிருப்பு அல்லாத பகுதிகளுக்கான சொத்து வரியானது நூறு சதவீதத்துக்குள்ளாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.