தமிழ்நாடு

சொத்துத் தகராறு கொலை வழக்கு : மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை

சொத்துத் தகராறு கொலை வழக்கு : மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை

webteam

புதுக்கோட்டையில் சொத்து தகராறு காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை அடப்பன்வயலை சேர்ந்த சந்தானம் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் சொத்துப் பிரச்சனையில் முன்விரோதம் இருந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு சந்தானம் பால்பண்ணை ரவுண்டானா அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன், கடல் விஜய், திருமுருகன் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வழக்கின் விசாரணைகள் முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. விசாரணைகளின் அடிப்படையில் மணிகண்டன், கடல் விஜய், திருமுருகன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபதாரம் விதித்து நீதிபதி அப்துல் மாலிக் தீர்ப்பு அளித்தார். குற்றச்சாட்டுகள் முறையாக நிரூபிக்கப்படாததால் முதல் எதிரி கிருஷ்ணமூர்த்தி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.