வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆனந்தாஸ் குழும ஹோட்டல்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கோவையில் பிரபலமான ஆனந்தாஸ் ஹோட்டல் குழுமங்களில் வருமான வரித்துறையினர் நேற்று காலை முதல் ஆர்எஸ்.புரம் லட்சுமி மில் வடவள்ளி காந்திபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஓட்டல்களில் சோதனை செய்து வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் ஆனந்தாஸ் உணவகத்திற்கு சொந்தமான சுமார் 25 இடங்களில் காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாகவும், 8 உணவகங்கள், உணவக உரிமையாளரின் வீடு நெருங்கிய உறவினர் உள்ளிட்ட வீடுகளில் சோதனை நடைபெற்றது.
மொத்தம் 25 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், 20 இடங்களில் சோதனை முடிவு பெற்றுள்ளது. மீதமுள்ள ஐந்து இடங்களில் இன்றும் சோதனை தொடர உள்ளது. இன்று மாலைக்குள் சோதனை முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உணவகங்கள் மற்றும் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்களை சேகரித்து வைத்துள்ளனர். உணவகங்கள் வழக்கம் போல் இயங்க அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.