protest
protest pt web
தமிழ்நாடு

தென்காசி: மண்ணைத் தின்று போராட்டம் நடத்திய பேராசிரியர்கள் - காரணம் இதுதான்!

PT WEB

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி உள்ளது. இங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு, நெல்லை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் தனி அலுவலராக நியமிக்கப்பட்டு பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோருக்கு சம்பளம் வழங்கி வந்தது. 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தனி அலுவலர் அங்கீகாரம் புதுப்பிக்கப்படாததால் சம்பள பில்லில் கையெழுத்து போட இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 2 மாதம் சம்பளம் வழங்கப்படாதது தொடர்பாக கல்லூரியில் கடந்த 7 ஆம்தேதி முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள் அலுவலர்கள் ஆகியோர் பள்ளிக் கல்வி இணை இயக்குநர், கல்வித்துறை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளனர். நேரிலும் சம்பளம் வழங்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை.

எனவே இன்று 2 மாத சம்பளம் வழங்க கோரி 29 பேராசிரியர்கள், கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கல்லூரி முடிந்த பிறகும் கல்லூரி வாயிலில் தரையில் அமர்ந்து மண்ணைத் திண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.