தமிழ்நாடு

குரல் பரிசோதனை ! சென்னையில் நிர்மலா தேவி

குரல் பரிசோதனை ! சென்னையில் நிர்மலா தேவி

webteam

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேராசிரியை நிர்மலாதேவி, குரல்மாதிரி பரிசோதனைக்காக பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்து வரப்பட்டார்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயலும் வகையில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த உதவி பேராசிரியர் நிர்மலாதேவி மாணவிகளுடன் பேசிய தொலைபேசி உரையாடல் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவரின் குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னை தடய அறிவியல் துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்ல அனுமதி கோரி சிபிசிஐடி தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது. 

நிர்மலாதேவியை 3 நாட்கள் சென்னை அழைத்து சென்று விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை அடுத்து பலத்த பாதுகாப்புடன் நிர்மலாதேவியை மதுரை சிறைச்சாலையில் இருந்து காவல் துறையினர் இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர். நாளை நிர்மலாதேவியிடம் குரல்மாதிரி பரிசோதனை நடைபெறவுள்ளது. குரல் மாதிரி பரிசோதனை நடைபெறும் நேரம் போக மற்ற நேரத்தில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்படும் நிர்மலாதேவி 29 ஆம் தேதி மதுரை சிறைக்கு அழைத்து செல்லப்படுவார்.