நிர்மலாதேவி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசியர் முருகனிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி சம்மன் வழங்கினார்.
அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைப்பதுக் குறித்து ஆடியோ வெளியானது தொடர்பாக, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் விசாரனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிர்மலாதேவியிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின்போது, வணிக மேலாண்மைத்துறை உதவிப் பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி குறித்த விவரங்களை அவர் கூறியதாகத் தெரிகிறது. இதனிடையே, தலைமறைவாக இருந்த இருவரையும் 4 தனிப்படைகளைச் சேர்ந்த சிபிசிஐடி காவல்துறையினர் மதுரை, அருப்புக்கோட்டை, திருச்சுழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இன்று பல்கலைக்கழக வருகை பதிவேட்டில் கையெழுத்திடுவதற்காக காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு வந்த முருகனை, சிபிசிஐடி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி அவருக்கு சம்மன் வழங்கினர். இதனைதொடர்ந்து நண்பகல் சிபிசிஐடி காவல்துறை அலுவலகத்தில் அவர் ஆஜர் ஆகியுள்ளார். முருகனிடம், சிபிசிஐடி காவல்துறையினர் கிடுக்குபிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.