மாணவியின் பெற்றோர் புதியதலைமுறை
தமிழ்நாடு

கரூர் | தனியார் பள்ளி மாணவி இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து காயம்.. போலிசார் விசாரணை

பள்ளி மாணவி இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது தற்கொலைக்கு முயன்றாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

PT WEB

கரூரில் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி இரண்டாவது மாடியில் இருந்து  விழுந்துவிட்டதாக பள்ளி நிர்வாகத்தினரே தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்கு சேர்த்தனர். இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அந்த மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கரூர் ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் மாணவி ஒருவர் ஆச்சி மங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்து வருகிறார்.  இன்று மாலை இரண்டாவது மாடியில் இருந்து அந்த மாணவி  விழுந்து விட்டதாக கூறி பள்ளி நிர்வாகத்தினர் பெற்றொருக்கு  தகவல் தெரிவித்துவிட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட  நிலையில் அந்த மாணவி தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து  தான்தோன்றிமலை காவல் நிலையப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாணவியின் தாயார், ”என் மகள் எப்படி விழுந்தார் என  பள்ளியில் கூற மறுக்கின்றனர். கால் எலும்பு முறிந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு பள்ளி நிர்வாகம்தான்  பொறுப்பு” என கூறினார்.

தொடர்ந்து பள்ளி மாணவி இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது தற்கொலைக்கு முயன்றாரா  என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.