தமிழ்நாடு

18,000 பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு

18,000 பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு

webteam

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளி சங்கத்தில் உள்ள பள்ளிகள் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரலாறு காணாத அளவில் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்திற்கு சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளி சங்கத்தில் உள்ள பள்ளிகள் நாளை இயங்காது என இப் பள்ளிகளுக்கான சங்க தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

அதேபோல் தனியார் பள்ளிகள் இயங்காது என தமிழக தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் டி.சி. இளங்கோவன் அறிவித்துள்ளார். அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 18 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் பள்ளிகள் விடுமுறை குறித்து அரசு தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.