தமிழ்நாடு

கெடிலம் ஆற்றில் தனியார் ஆலை கழிவுகள் கலப்பு: செத்து மிதக்கும் மீன்கள்

கெடிலம் ஆற்றில் தனியார் ஆலை கழிவுகள் கலப்பு: செத்து மிதக்கும் மீன்கள்

webteam

கெடிலம் ஆற்றில் உள்ள தடுப்பணையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.

கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை, கெடிலம் ஆற்றில் உள்ள தடுப்பணையில் இரண்டாவது நாளாக  ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. கெடிலம் ஆற்றின் குறுக்கே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நன்னீர் சேகரிப்புக்காக தடுப்பணை கட்டப்பட்டது. அந்த தடுப்பணையின் அருகேயுள்ள தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து கழிவு நீர் திறந்து விடப்படுகிறது. இந்த கழிவுநீரால் தடுப்பணையில் இருந்த ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.

மேலும் கழிவு நீர் கலப்பதால் தடுப்பணையில் மீன்கள் செத்து மிதக்கும் பிரச்னையை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.