தமிழ்நாடு

சென்னையில் திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் கல்லூரி பேருந்து

சென்னையில் திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் கல்லூரி பேருந்து

webteam

சென்னை பெருங்களத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து தீப்பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. 

தனியார் கல்லூரி பேருந்து ஒன்று பெருங்களத்தூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை அடுத்து பேருந்து ஓட்டுநர் சுதாரித்து கொண்டார். உடனே பேருந்தை விட்டு கீழே இறங்கியுள்ளார். இதையடுத்து பேருந்தின் முன்பகுதி தீப்பற்றி எரிய தொடங்கியது. 

இதைத்தொடர்ந்து ஓட்டுநர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள் பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நல்வாய்ப்பாக பேருந்தில் பயணம் செய்த யாருக்கும் காயம் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.