தமிழகம் முழுவதுமுள்ள சிறைகளில் உள்ள சிறை உணவகங்கள் மூலம் கடந்த ஆண்டு 37 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி கனகராஜ் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள சிறைகளில் உணவகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் கைதிகள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள உணவு விடுதி நவீன முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதை சிறைத்துறை டி.ஐ.ஜி கனகராஜ் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், உணவகப் பணியில் தமிழகம் முழுவதும் 600 கைதிகள் ஈடுபட்டிருப்பதாகவும் அவர்களுக்கு ஊதியம் தவிர, லாபத்தில் 20 சதவிகிதம் தரப்படுவதாகவும் கூறினார். அதோடு சிறை உணவகங்கள் மூலம் கடந்த ஆண்டு 37 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாகவும் கூறினார்.