ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை மத்திய சிறையில் 450 கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய, பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும் என மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காட்டு தீ போல் பரவிய இந்த பண்பாட்டு மீட்பு போராட்டம் சிறை கைதிகளையும் விட்டு வைக்கவில்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாக மதுரை மத்திய சிறையில் கைதிகள் 450 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.