பிரதமர் மோடி pt web
தமிழ்நாடு

சென்னை வரும் பிரதமர் மோடி.. மதுரை பொதுக்கூட்டம் இடம் மாற்றம்!

வருகிற 23-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம்.

PT WEB

சட்டமன்ற தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிற 23ஆம் தேதி தமிழகம் வருகிறார். முன்னதாக மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம்வகிக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு பா.ஜ.க. தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது.

பிரதமர் மோடி

இந்த நிலையில் திடீரென இந்த பொதுக்கூட்டம் மதுரையில் இருந்து சென்னை மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நாளை பாஜகவின் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் இடம் தேர்வு மற்றும் காவல் துறைக்கு இது சம்பந்தமாக அனுமதிகோரி மனு அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பாஜக

தமிழகத்தின் தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டால் மிகப்பெரும் எழுச்சியாக இருக்கும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் இந்த கூட்டணியில் இன்னும் சில கட்சிகளை இணைக்கவும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி இருக்கிறது.