தமிழ்நாடு

கடற்கரையில் குப்பைகளை அகற்றிய பிரதமர் மோடி!

கடற்கரையில் குப்பைகளை அகற்றிய பிரதமர் மோடி!

webteam

மாமல்லபுரத்தில் நடைபயிற்சி சென்ற பிரதமர் மோடி, கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி, தூய்மை பணியில் ஈடுபட்டார்.

பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்றது. இருவரும் நடந்து சென்று பேசியபடியே அங்குள்ள சிற்பங்களை பார்த்து வியந்தனர்.  சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று கோவளம் வருகை தருகிறார். இதற்காக கோவளத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரதமர் மோடி தங்கியுள்ளார்.

அங்கிருந்து பிரதமர் மோடி, இன்று காலை நடைபயிற்சி நடைபயிற்சி சென்றார். கால்களில் செருப்பு அணியாமல் சென்ற அவர், கடற்கரை மணலில் கிடந்த குப்பைகளைக் கைகளால் அள்ளி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். சுமார் அரை மணி நேரம், துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி, தான் சேகரித்த குப்பைகளை ஓட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் கொடுத்தார். 

பின்னர் இதுபற்றி ட்வீட் செய்துள்ள பிரதமர், பொது இடங்களை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க பொதுமக்க ளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள உறுதியேற்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.