தமிழ்நாடு

'புஸ்வாணம்..': ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ ஒன்றாக சந்திக்காமலே சென்ற பிரதமர் மோடி

webteam

இரு நாள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தமிழகத்திலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி. அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமரை வழியனுப்பி வைத்தார்.

பிரதமரின் இரண்டு நாள் வருகையின் போது அதிமுகவில் நடக்கும் ஒற்றை பிரச்சினையை வைத்து ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை எழுந்தது இருந்து. அதைத் தொடர்ந்து ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் ஓ.பன்னீர்செல்வத்தை பேசுவதற்கு அனுமதிக்காமல் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில். மற்றொரு தேதியான ஜூலை 11ஆம் தேதிக்கு மீண்டும் அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றதும் நீதிமன்றம் பொது குழு நடத்த அனுமதி கொடுத்தது. பின்னர் ஆண்டு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

நீதி மன்ற வழக்கு., தேர்தல் ஆணையம் சென்றது., வங்கி கணக்குகள் முடக்க சொல்லி கடிதம்.,என்று ஒருபுறம் நடக்க.  ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியது எடப்பாடி பழனிசாமியை ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கியது என பரஸ்பரமாக இரு தரப்பும் மாறி மாறி நடந்த அரசியல் சதுரங்கம் அரசியலின் ஆழத்தை கட்டியது. இந்த சூழலில் கடந்த வாரம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை சந்திக்க நேரம் கெட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த சந்திப்பு நடைபெறவில்லை.

இந்த நிலையில் நேற்று இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த பிரதமரை எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்தில் வரவேற்றார். ஓபிஎஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆகியோர் ஒன்றாக பிரதமரை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்காமல் போக. இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் டெல்லி செல்லும் பொழுது விமான நிலையத்தில் அவரை ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று  வழி அனுப்பி வைத்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் சந்திப்பு குறித்த கேள்விக்கு  தனது உடல்நிலை பற்றி கேட்டதாகவும், நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் வெல்லும் வெல்லும் என்று பதில் அளித்தார்.

சென்னை வந்திருந்த நரேந்திர மோடி ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் மரியாதை நிமித்தமாகவே சந்தித்தார்கள். அரசியல் ரீதியான சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை. தமிழக அரசியலில் அதிமுகவில் ஒற்றை தலைமை புயலை கிளப்பிய நிலை பிரதமர் வருகை பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் அமைதியாகவே கடந்திருக்கிறது.

இதையும் படிக்க: ஆந்திரா டூ கேரளா: இறைச்சிக்காக மாடுகளை கொண்டு சென்ற லாரியை மறித்து பாஜக ஆர்ப்பாட்டம்