தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி, திரௌபதி முர்மு, முக ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து pt
தமிழ்நாடு

”சர்வதேச திருவிழாவாக பொங்கல் பண்டிகை உருவெடுத்துள்ளது..”- மோடி, முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

தமிழர் பண்டிகையான பொங்கல் சர்வதேச திருவிழாவாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

குடியரசுத் தலைவர் வாழ்த்து..

பொங்கல், மகர சங்கராந்தி, பிஹு, லோஹ்ரி ஆகிய அறுவடை திருநாள் பண்டிகைளை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். உழவர் திருநாள் நாட்டின் வளமான அடையாளமாகவும் தேசிய வேளாண் பாரம்பரியத்தின் ஒருமைப்பாட்டு உணர்வை பிரதிபலிப்பதாகவும் உள்ளது என அவர் கூறியுள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார மரபுகளை இந்த பண்டிகை உணர்த்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அர்ப்பணிப்புடன் உழைத்து வரும் அனைத்து மக்களுக்கும் உணவளிக்கும்நாட்டின் விவசாயிகளுக்கு நன்றிசெலுத்துவதற்கான வாய்ப்பாக இந்தபண்டிகை அமைந்துள்ளதாக திரௌபதிமுர்மு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பானையில் பொங்கல் வைத்து, பூஜை செய்து வழிபாட்டில் ஈடுபட்டார். பின் அங்கிருந்த பசு மற்றும் கன்றுக்கு பிரதமர் மோடி உணவளித்தார்.

pm modi pongal celebration

பொங்கல் விழா கொண்டாட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, பொங்கல் வாழ்த்துகளை தமிழில் தெரிவித்தது அங்கிருந்தோரை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. விழாவில் பேசிய அவர், சர்வதேச திருவிழாவாக பொங்கல் பண்டிகை உருவெடுத்துள்ளதாகவும், உலகம் முழுவதும் தமிழ் சமூகத்தினரும், தமிழ் கலாசாரத்தை பின்பற்றும் மக்களும், மிகுந்த உற்சாகத்துடன் பொங்கலை கொண்டாடுவதாகவும் கூறினார்.

முதல்வர் வாழ்த்து

ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்கும் இந்த நல்லாட்சி, திராவிட மாடல் 2.O வடிவில் தொடர மக்கள் முடிவெடுத்துவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்தில், திராவிட மாடல் அரசுவழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பால்,பொங்கலை மிகச் சிறப்பாககொண்டாட மக்கள் தயாராகி விட்டதாககுறிப்பிட்டுள்ளார். சென்னை சங்கமம், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தானும் ஆயத்தமாகியுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அரசுஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் என பல்வேறு தரப்பினரின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றம் என இந்த பொங்கல் மகிழ்ச்சி பொங்கலாக அமையவேண்டும் என அரசு செயல்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார். புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைந்திட நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.