பிரதமர் நரேந்திர மோடி 10 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக பங்கேற்றுள்ளார்.
இதில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக மத்திய அரசின் நிதி குறித்து முதலமைச்சர் கோரிக்கை விடுப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுவரை கொரோனா பாதிப்பு தொடர்பாக 5-க்கும் மேற்பட்ட ஆலோசனை கூட்டங்களை மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.