ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு - புதிய விலைப்பட்டியல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து, வரும் 16.05.2021 முதல் விற்பனை செய்ய தமிழக முதல்வர் அரசாணை பிறப்பித்துள்ளார். இதன்படி வரும் 16ஆம் தேதி முதல் ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைத்து விற்பனை செய்யப்படும்.
அதேபோல சென்னையில் பிரதி மாதம் 1ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை வழங்கப்படும் பால் அட்டை வரும் 16 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை வழங்கப்படும் அதற்கான வித்தியாச தொகை அடுத்த மாத பால் அட்டை விற்பனையின் போது ஈடு செய்யப்படும்.
பால் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறுவதை கண்காணிக்க 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை மையம், ஆவின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு ஆவின் பால் விநியோகம் தொடர்பான தகவல்களுக்கு தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.