தமிழ்நாடு

கொசுப்புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

கொசுப்புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

webteam

தொடர் எச்சரிக்கைகளுக்கு பிறகும் நன்னீரில் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்ட வீட்டின் குடிநீர் இணைப்பை சேலம் மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.

சேலம் மாவட்டம் மரவனேரி பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, ராஜாஸ்டீபன் என்பவரது வீட்டில் உரல், பாத்திரங்களில் மழைநீர் தேங்கி அதில் ஏராளமான கொசுக்கள் இருப்பதைக் கண்டுபிடித்து அழித்தனர். கொசுக்க‌ள் உற்பத்தியாகக் காரணமாக இருந்ததாகக் கூறி ராஜாஸ்டீபனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள், அவரது வீட்டின் குடிநீர் இணைப்பையும் துண்டித்தனர். அதேபோல், தேநீர் கடைகளில் சோதனை நடத்திய அதிகாரிகள், பிளாஸ்டிக் தொட்டிகளில் கொசுக்கள் இருப்பதைக் கண்டுபிடித்து கடை உரிமையாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.