காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் அத்திவரதரை தரிசிப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார்.
டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் மதியம் 2.10 மணிக்கு சென்னை வரும் குடியரசுத் தலைவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் செல்கிறார். தொடர்ந்து, வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை மாலை 3 முதல் 4 மணிக்குள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தரிசனம் செய்கிறார்.
பின்னர், ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வரும் அவர், இரவு ராஜ்பவனில் தங்குகிறார். இதையடுத்து சனிக்கிழமை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சிறப்பு பட்டமளிப்பு விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, முன்னாள் நீதிபதியும் கேரள மாநில ஆளுநருமான சதாசிவம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்குகிறார்.
இதைத்தொடர்ந்து, ஸ்ரீகரிகோட்டா செல்லும் செல்லும் குடியரசுத் தலைவர், இஸ்ரோ சார்பில் திங்கள்கிழமை அதிகாலை சந்திராயன்-2 ஏவப்படுவதை நேரில் பார்வையிடுகிறார்.