ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “ தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்க்க இருக்கும் தமிழிசைக்கு தேமுதிக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழிசைக்கு இப்பதவி கிடைத்துள்ளது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். அவருக்கு பதவி கிடைத்துள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியை எற்படுத்துகிறது.
கடமையை செய் பலனை எதிர்பார்காதே என்பதற்கு உதாரணமாக தமிழிசை செயல்பட்டார். பதவியேற்பு விழாவிற்கு வருகை தர வேண்டும் என்று தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக விஜயகாந்துடன் கலந்து பேசி விழாவில் கலந்துகொள்வது குறித்து முடிவு செய்யப்படும். விரைவில் டெல்லி செல்லும் போது சுங்கச்சாவடி கட்டணத்தை குறைப்பது குறித்து வலியுறுத்துவேன். மக்களை பாதிக்காத வகையில் இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பில் கோரிக்கை வைக்கிறேன்.
இந்தியா முழுவதும் ஒரே ரேஷ்ன் அட்டை திட்டம் வரவேற்கத்தக்க திட்டம். இதன் காரணமாக கள்ளச் சந்தையில் பொருட்கள் பதுக்கப்படுவது குறைக்கப்படும். இந்திய அரசியலில் பெண்கள் அரசியலுக்கு சரிசமமாக வரவேண்டும். இதற்கு தமிழிசை ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்” என தெரிவித்தார்.