தமிழ்நாடு

கூட்டணியில் உரிய மதிப்பளிக்காவிடில் தனித்துப் போட்டியிட தயார் - பிரேமலதா விஜயகாந்த்

Sinekadhara

கூட்டணியில் உரிய மதிப்பளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என தேமுதிக கட்சியின் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.

தேமுதிக கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது கூட்டணி குறித்த சந்தேகங்களை அக்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கவேண்டும் என்று கூறினார்.

ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 15 இடங்கள்தான் ஒதுக்கப்படும் என்ற செய்தி பரவியதால் பலர் கட்சி மாறிவிட்டனர். இதனால் தேமுதிக கட்சி பலவீனமாக இருப்பதாகவும், எனவே கூட்டணிக் குறித்த பேச்சுவார்த்தையை முன்கூட்டியே ஆரம்பிக்கவேண்டும் எனவும் பேசினார். மேலும் தேர்தல் கூட்டணி குறித்த முக்கிய முடிவை தங்கள் திருமண நாளான நாளை கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/jfdjfk-xVVc" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

தொகுதியில் உரிய இடங்கள் இல்லாவிட்டால் அமமுக கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படவும் வாய்ப்பு இருப்பதால் பிரமலதா தனித்து போட்டியிடுவோம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாக கருதப்படுகிறது.