பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கி தமிழ்நாடு அரசு மக்களை ஏமாற்றுவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார்.
திருத்தணியில் ரேசன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில், பல்லி இருந்ததாக குற்றம்சாட்டிய நபர் மீது வழக்குப் பதியப்பட்டதால், அவரது மகன் குப்புசாமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, குப்புசாமியின் இல்லத்திற்குச் சென்று ஆறுதல் கூறி நிதி வழங்கினார். அப்போது பேசிய பிரேமலதா, அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத்தொகை 2 ஆயிரத்து 500 வழங்கியபோது ஐந்தாயிரம் வழங்க வேண்டும் என்று கூறிய தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொங்கலில் தரமற்ற 21 பொருட்களை வழங்கி மக்களை ஏமாற்றுவதாக குற்றம்சாட்டினார்.
இதையும் படிக்க: மக்கள் கண்காணிப்பகம் மீதான அடக்குமுறைகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் - சீமான்