பிரேமலதா எக்ஸ் தளம்
தமிழ்நாடு

ஆளுநர் உச்சரிப்பில் பிழைகள்.. சுட்டிக்காட்டிய பிரேமலதா.. உட்காரச் சொன்ன சபாநாயகர்!

ஆளுநர் பேசிய உரை தொடர்பாக தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சுட்டிக்காட்டியிருந்தார். அதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கமளித்திருந்தார்

Prakash J

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம், இன்று சட்டசபையில் மீண்டும் தொடங்கியது. அப்போது சட்டமன்றப் பேரவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, உரிமை மீறல் பிரச்னை மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து அவையில் பேச அதிமுக தரப்பில் கோரப்பட்டது.

அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்காத காரணத்தால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், ஆளுநர் பேசிய உரை தொடர்பாக தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சுட்டிக்காட்டியிருந்தார். அதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கமளித்திருந்தார். மேலும், பிரேமலதாவை அமரும்படி அவர் கூறினார். இதுகுறித்த செய்தியை இந்த வீடியோவில் பார்க்கலாம்.