தமிழ்நாடு

ஓசூர்: மினி கிளினிக் திறப்புவிழா - கேபி முனுசாமிக்காக 3 மணி நேரம் காத்திருந்த கர்ப்பிணிகள்

Sinekadhara

ஓசூர் சின்ன எலசகிரியில் அம்மா கிளினிக் திறப்புவிழாவில் கலந்து கொள்ளவிருந்த மாநிலங்களவை எம்பி கேபி முனுசாமி வருகைக்காக, கர்ப்பிணிகள் மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் இன்று அம்மா மின் இணைப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதில் மாநிலங்களவை எம்பி கேபி முனுசாமி கலந்து கொண்டு திறந்து வைப்பதாக இருந்தது. அவரின் வருகைக்காக நீண்ட நேரம் கர்ப்பிணிகள் காத்திருந்தனர். 3 து திரும்பி சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் இன்று ராமன் தொட்டி, சித்தனப்பள்ளி, சின்ன எலசகிரி, பெடரப்பள்ளியில், வெங்கடேஷ் நகர் ஆகிய ஐந்து இடங்களில் அம்மா மினி கிளினிக் துவங்க சுகாதாரத்துறை சார்பில் ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சின்ன எலசகிரி பகுதியில் அரசு பள்ளியில் ஒரு அறையில் அம்மா மினி கிளினிக் திறக்க ஏற்பாடுகள் செய்து தோரணங்கள், மாலைகள், அலங்கார பொருட்கள், குத்துவிளக்கு ஏற்ற என அனைத்து ஏற்படுகளும் செய்யப்பட்டது. காலையே 10க்கும் மேற்ப்பட்ட கர்ப்பிணிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு வழங்க பெட்டகமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், மாலை மூன்று மணி ஆகியும் மாநிலங்களவை எம்பி கே.பி.முனுசாமி அங்கு வரவில்லை. இதனால் நீண்டநேரம் காத்திருந்த கர்ப்பிணிகள் அங்கிருந்து களைந்துசென்றனர்.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் கோவிந்தை பலமுறை தொடர்ப்பு கொண்டபோதும் அவர் போனை எடுக்கவில்லை