தமிழ்நாடு

திடீரென்று வந்த பணி ஆணை: 250கிமீ பயணம் செய்து செவிலியர் பணியில் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி

webteam

தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டு இருந்த 8 மாத கர்ப்பிணியான செவிலியருக்கு ஒப்பந்த அடிப்படையில் அரசுப் பணியாணை வந்ததால் 250 கிமீ காரில் பயணம் செய்து பணியில் சேர்ந்தார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வினோதினி (25). இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது 8மாத கர்ப்பிணியாகவும் உள்ளார். இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்காக அவரை அரசு ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு எடுத்துள்ளது. இது தொடர்பான ஆணை வினோதினிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் வேலைக்கு சேர வேண்டும். ஆனால், வினோதினி திருச்சியில் இருந்துள்ளார். 8 மாத கர்ப்பிணி ஊரடங்கு நேரத்தில் 250கிமீட்டர் எப்படி பயணம் செய்வது என உறவினர்கள் திகைத்துள்ளனர். இந்தத் தகவல் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு செல்ல, அவர் எடுத்த நடவடிக்கையின் பேரில் மாவட்ட ஆட்சியர் மூலம் வினோதினுக்கு அனுமதி பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வாடகைக்கார் மூலம் 250கிமீ பயணம் செய்த வினோதினி பணியில் இணைந்துள்ளார்.