தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.. அதுமட்டுமல்ல.. அதேப்பகுதியில் சுற்றிவருகிறது..
இந்தநிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், 20-24 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது..தற்போது பல இடங்களில் மழையானது பெய்து வருகிறது.
இந்நிலையில்,மழைத்தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “ காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திரத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதால் அடுத்த சில மணிநேரங்கள் தமிழக கடற்கரையோரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இது. சாதாரண மழையாகவே இருக்கும் . இந்த புயல் சின்னத்தால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு கிடைக்கும் கடைசி மழை. மேலும், சென்னை கடற்கரைக்கு இணையாக வடக்கு நோக்கி மேகக் கூட்டங்கள் நகரும் ." என்று பதிவிட்டுள்ளார்.