தமிழ்நாடு

பாலமேடு ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கிய பிரபாகரன் முதலிடம்

பாலமேடு ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கிய பிரபாகரன் முதலிடம்

JustinDurai

பாலமேடு ஜல்லிக்கட்டில் மதுரை பொதும்பை கிராமத்தைச் சேர்ந்த பிராபகரன் 7 சுற்றுகள் முடிவில் 21 காளைகள் பிடித்து முதலிடம் பெற்றுள்ளார்.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. இதில் மதுரை பொதும்பை கிராமத்தைச் சேர்ந்த பிராபகரன் 7 சுற்றுகள் முடிவில் 21 காளைகள் பிடித்து முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டில் வென்ற மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.