எண்ணூரில் உள்ள சில இடங்களில் நாளை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பப் பணிகள் காரணமாக எண்ணூரில் உள்ள சில பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மாநகராட்சி பகிர்மானத்துறை தெரிவித்துள்ளது. இந்த மின்தடை மாதந்தோறும் நடைபெறும் ஒரு இயல்பான நடவடிக்கை தான். தொழில்நுட்பப் பணிகள் முடிந்த பிறகு மீண்டும் மின் விநியோகம் செய்யப்படும்.
மின்தடை ஏற்படும் பகுதிகள் : எண்ணூர், கதிவாக்கம், எர்ணாவூர், ஐசிஐ பிரமல் கம்பெனி, எம்.ஆர்.எஃப் நிறுவனம், ஐடிசி நிறுவனம், அசோக் லேலாண்ட் நிறுவனம், ஹிந்துஜா தொழிற்சாலை மற்றும் இஐடி பாரி.