தமிழ்நாடு

'கழகத்தை காத்திட கட்சி அலுவலகம் வருக'- சசிகலாவை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

'கழகத்தை காத்திட கட்சி அலுவலகம் வருக'- சசிகலாவை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

kaleelrahman

'கழகத்தை காத்திட, எங்களை வழிநடத்திட கட்சி அலுவலகத்திற்கு வருக வருக' என சசிகலாவை வரவேற்று அதிமுக தலைமைக் கழகம் அருகே ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் யார் தலைமை என உட்கட்சி பிரச்னை உச்சத்தில் இருந்து வருகிறது. ஏற்கெனவே ஒ.பி.எஸ், இ.பி.எஸ் அணி யுத்தத்தில் இருக்கும் நிலையில், தொண்டர்களை சந்திக்க சசிகலா சுற்றுப் பயணம் தொடங்கி இருக்கிறார்.

இந்த நிலையில், 'அதிமுக தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரம், கட்சியின் பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களே, கழகத்தை காத்திட எங்களை வழிநடத்திட கட்சி அலுவலகத்திற்கு வருக வருக' என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அருகே ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.