சென்னை போரூர் ரவுண்டானா பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 25ம் தேதி திறந்துவைப்பார் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஒன்றான போரூர் பகுதியில் வாகன நெரிசலைக் குறைக்க மேம்பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டும் பணிகள் முடிவடைந்தும் திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை பெய்த மழையால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மாற்றிவைத்து விட்டு பொதுமக்கள் பாலத்தைப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தினர். இதையடுத்து பாலத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில், போரூர் பாலத்தை ஆய்வு செய்த பொதுப்பணித்துறையினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 25ல் பாலத்தைத் திறந்துவைப்பார் என்று அறிவித்துள்ளனர்.