தமிழ்நாடு

8 உயிர்களை பலிகொண்ட போக்குவரத்து பணிமனை கட்டடம் இடிப்பு

webteam

8 உயிர்களை பலிகொண்ட பொறையார் அரசு போக்குவரத்து பணிமனை கட்டடம் இடிக்கப்பட்டது.

இடிந்து விழுந்த பொறையார் பணிமனை கட்டடத்தின் இடிபாடுகளில் எஞ்சியுள்ள பொருட்களை மீட்கும் பணிகள் முடிந்த பின்னர் விபத்துக்குள்ளான கட்டிடத்தை முழுமையாக இடிக்கும் பணி நடைபெற்றது. இதனால் பொறையார் பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

பொறையார் அரசுப் பேருந்து பணிமனை ஓய்வறை கட்டடம் கடந்த 20 ஆம் தேதி அதிகாலை இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிர்ழந்தனர். படுகாயம் அடைந்த மூன்று பேர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

முன்னதாக, தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமை‌‌யான கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு‌ பாதுகாப்பற்ற கட்டடங்கள் இடிக்கப்படும்‌ என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார். நாகை மாவட்டத்தில் பருவ ம‌‌ழைக்கான ஏற்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆய்வில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன்‌ மற்றும் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்‌டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பழமையான கட்டடங்கள் இடிக்கப்படும் என தெரிவித்தார்.