தமிழ்நாடு

கத்தோலிக்க பாதிரியார்கள் அறக்கட்டளை நடத்தக்கூடாது - தமிழக ஆயர்களுக்கு அறிவுறுத்தல்

JustinDurai
தமிழ்நாட்டில் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ள பாதிரியார்கள் தனிப்பட்ட அறக்கட்டளைகளை நிறுவி நடத்தக்கூடாது என போப் பிரான்ஸிஸின் இந்தியாவுக்கான பிரதிநிதி பேராயர் லியொபொல்டோ கிரெல்லி கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஆயர்கள் கவுன்சிலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பாதிரியார்களுக்கான விதிகளின்படி அவர்கள் தனிப்பட்ட அறக்கட்டளைகளில் எந்த பதவியும் வகிக்கக் கூடாது என சுட்டிக்காட்டியுள்ளார். தனிப்பட்ட அறக்கட்டளைகளை மக்கள் நலனுக்காக தொடங்கினாலும் அவை பெரும்பாலும் அந்த பாதிரியார்களின் பொருளாதார, அதிகார மையங்களாக மாறிவிடுவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே பாதிரியார்கள் எந்த தனிப்பட்ட அறக்கட்டளையையும் நடத்தாமல் இருப்பதை ஆயர்கள் உறுதி செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பான நடைமுறைகளை ஆயர்கள் கவுன்சில் உருவாக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.