ஆந்திர மாநிலம் அம்மபள்ளி அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரத்தில் அம்மபள்ளி அணை நிரம்பியதால், நாள்தோறும் இரவு நேரங்களில் அங்கிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அதனால், கொசஸ்தலை ஆற்றங்கரையோரத்தில் வசித்து வரும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வினாடிக்கு 600 கன அடியிலிருந்து ஆயிரம் கன அடி வரை மட்டுமே நீர் திறக்கப்படுவதால் பாதிப்பு ஏற்படாது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயரும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.